Showing posts with label ஆன்மீக சிந்தனைகள். Show all posts
Showing posts with label ஆன்மீக சிந்தனைகள். Show all posts

Wednesday, November 13, 2013

[Message] - நீர் அருந்தும் நேரங்கள் (Correct Timings of Drinking Water)

சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...!

1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!


* Shared info from f*c*bo*k.c*m

Sunday, November 10, 2013

[Message] - எது தியானம் ? (What is Meditation ?)

எது தியானம்?

ஒரு பொருள், இறைவன் அல்லது ஆத்மனின் தொடர்ந்த சிந்தனைப் பெருக்கே தியானம். தைலதாரை போன்று கடவுளின், ஒரே எண்ணத்தைச் சதா மனதில் கொள்வதே தியானம். யோகிகள் அதைத் தியானம் எனத் தெரிவிக்கின்றனர். பக்தர்கள் பஜன் என்கின்றனர். ஒரு புள்ளி அல்லது பொருளின் மீது மனதை ஒன்றச் செய்வதே ஒன்றித்தல். இதைத் தொடர்ந்து தோன்றி நிற்கிறது தியானம்.

தியானத்திற்குரிய தேவைகள்:

காலம்: அதிகாலையில் 4லிருந்து 6வரை தியானத்தை அப்பியசியுங்கள். இதுவே தியானத்தைப் பயிலுவதற்கான சிறந்த காலம். சிறிதும் தொந்தரவின்றி உங்கள் மனம் பரிசுத்தமாக இருக்கும் பகல் அல்லது இரவின் அப்பகுதியையே தேர்ந்தெடுங்கள். படுக்கைக்குச் செல்லும் முன் நீங்கள் தியானத்தில் அமரலாம். இந்நேரத்தில் மனம் அமைதியுடன் இருக்கும். ஞாயிறு நாட்கள் விடுமுறை நாட்களாதலால் மனம் சுதந்திரமாக இருக்கும். அன்று நீங்கள் நன்கு தியானத்தில் ஈடுபடமுடியும். ஞாயிறு நாட்களில் தீவிர தியானத்தில் ஈடுபடுங்கள். பால் பழங்களை மட்டும் உணவாகக் கொள்வதாலோ, உபவாசத்தை மேற்கொள்வதாலோ நல்ல தியானம் ஏற்படும். சதா உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி தியானத்தினால் பெரும் பயனை அடையுங்கள்.

இடம்: உத்தரகாசி, ரிஷீகேசம், பத்திரிநாராயணன் முதலிய ஆத்மீகச் சூழ்நிலைகள் ஓங்கி நிற்கும் ஏகாந்தமானதும் குளுமையானதுமானதோர் இடம் மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்த இன்றியமையாதது. எங்ஙனம் நீரில் உப்பு கரைந்து ஒன்றாகிறதோ, அதே போல் தன் அதிர்ஷ்டானமான பிரம்மத்தில், தியானாவஸ்தையிலுள்ள மௌன நிலையில், சாத்துவிக மனம் கரைந்து ஒன்றாகிறது. தனிமையும் தீவிர தியானமும் ஆத்மானுபூதிக்கான இரு முக்கிய தேவைகள், கங்கை அல்லது நர்மதையின் தீரம், இமாலயத் தோற்றம், அழகிய பூந்தோட்டம், புனிதக் கோவில்கள்-இவையே ஒன்றித்தல், தியானத்தில் மனதை உயர்த்தும் இடங்கள். இவ்வரிய இடத்தையே உங்கள் இருப்பிடமாக்கிக் கொள்ளுங்கள்.

ஆசனம்: சித்தாசனம் அல்லது பத்மாசனம் சரீரத்தை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. பந்தனங்களும் முத்திரைகளும் உடலை உரப்படுத்துகின்றன. பிராணாயாமம் காயத்தை லேசாக்குகிறது. நாடிசுத்தி மனஒருமைப்பாட்டை ஏற்படுத்துகிறது. இவ்வரிய தகுதிகளைப் பெற்றதும், பிரம்மனிடம் மனதைப் பதியவையுங்கள். அப்பொழுதுதான் தியானம் இலகுவாகவும் சந்தோஷமாகவும் தொடர்ந்து நிற்கும்.


* முகநூலில் இருந்து பகிரப்பட்டது.

[Message] - பெண்கள் வீட்டில் கடைபிடிக்க வேண்டியவை (சாஸ்திரத்தில் உள்ளது போல்)

பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் குறித்து கூறப்பட்டுள்ளவை..,

* சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது.

* இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது.

* அடிக்கடி வீட்டில் அழுக்கூடாது. இதுவே பீடையை
ஏற்படுத்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ்நிலை ஏற்படும். ஒரு இலைக்கு பரிமாறியதில் இருந்து எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறுவது நல்லதல்ல. வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போதும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிப்பது சிறந்தது.

* பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் தேங்காயை உடைக்கக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்கக்கூடாது. காரணம் உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் அவர்கள் எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.

* அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இட வேண்டும். வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும் அவர்களை வைத்து இதை செய்யாமல் வீட்டு எஜமான பெண்ணே இந்த பணியை செய்யும்போது லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

* கைகளால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பரிமாறக்கூடாது. வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதை கணவனிடம் தெரிவிக்கும் போது அது இல்லை என்ற வார்த்தையை கூறாமல் அந்த பொருள் வேண்டும் என்று கூறி வாங்கிவரச் செய்வது சிறந்தது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Friday, November 8, 2013

[Message] - What is Karma ? (எது கர்மம்)

வினை(கர்மம்) மூன்று வகைப்படும்.
1. பறித்தல்
2. பங்கிடுதல் 
3. படைத்தல்

1. பறித்தல்...மிருகங்கள் உணவு கிடைத்ததும் மற்றவர்களுக்கு கொடுக்காமல் தான் மட்டும் உண்ணவேண்டும் என்று நினைக்கிறது. மனிதர்களில் கடைநிலைபட்டவர்கள் இதே இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.

2.பங்கிடுதல்...மனிதர்கள் சேர்ந்து வாழும் குடும்ப வாழ்வில் ஈடுபாடு உடையவர்கள். தங்களுக்கு கிடைப்பதை பகிர்ந்து உண்ணும் இயல்புடையவர்கள்.

3. படைத்தல்...தனக்கு கிடைக்கும் உணவையோ மற்ற பொருட்களையோ பிறருக்கு கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியில், இன்பம் அடைபவர்கள் உயர்ந்தவர்கள்.

இந்த மூன்றாவது நிலையே மெஞ்ஞானத்திற்கான முதற்படி.




*முகநூலில் ஒரு குலுவில் இருந்து..

Thursday, November 7, 2013

[Message] - Why Hinduism has many Gods ? (ஏன் இந்து மதத்தில் மட்டும் இத்தனை கடவுள்கள்)

ஏன் இந்து மதத்தில் மட்டும் இத்தனை கடவுள்கள் என்ற கேள்வி இம்மதத்தை சார்ந்தவருக்கே பலருக்கு தெரியாது பிறகு எப்படி பூரண பக்தியுடன் அன்பை வெளிப்படுத்தி ஆன்மீகததை கடைபிடிக்க முடியும் ? இதோ பதில்...

பசும்பொன் முத்துராமலிங்கம் அய்யா அவர்கள் 21.2.1957, காஞ்சிபுரத்தில் ஆற்றிய உரையிலிருந்து:

’ஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ என்றுதானே கூறியிருக்கிறார்கள் அப்படியிருக்கும் போது பல தெய்வங்கள் இருப்பானேன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது யார் சொன்ன வார்த்தை? அது அநேக மக்களுக்கு தெரியாது. சரியாகப் புரியாதவர்கள், நாஸ்திகர் பேசினார் என்று சொல்வார்கள். இந்த வாக்கு திருமூலர் வேதவாக்கு. அவர் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கூறியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதை முழுவதும் கூறாமல்,’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு விடுகிறார்கள் நாஸ்திக கும்பல்.

அப்படியானால் ஒரு வக்கீல் ஒரு statementன் ஒரு பகுதியை மாத்திரம் வாசித்துக் காட்டிவிட்டு, இன்னொரு பகுதி வேண்டாம் என்று கூறினால், அடி முட்டாளாக இருந்தால்தான் அதை கேட்பான். இல்லாவிட்டால் எடுத்துக் கொண்ட பகுதியைப் பூராவும் படி என்று சொல்லுவான். அதுதான் முறை.

பல தெய்வ உருவங்களை வைத்து வணங்குகிற மக்களுக்கு, ஒரு தெய்வம் தான் உண்டு என்று சொல்வதற்கு என்ன காரணம்? என்று சாதாரண மக்களுக்கு தெரியாது.

ஒருவர் வீட்டுக்கு போகிறோம். அந்த வீட்டில் பல படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அந்த வீட்டுக்காரர் வந்து, இதுதான் என்னுடைய தகப்பனார் படம் என்று ஒரு படத்தைக் காட்டுகிறார். அதற்கு பின்னால் ஒரு பெண்ணோடு இருப்பவர் படத்தைக் காட்டி, இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஆணும், பெண்ணும், ஒரு குழந்தையுடன் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார்.

அதற்குப் பின்னர் விருத்தாப்பியப் பருவத்தில் ஒருவரும், கல்யாண கோலத்தில் இருக்கிற ஒரு ஆணும், பெண்ணும் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். இவ்வளவையும் பார்த்துக் கொண்டு வருகிறவர் உனக்கு எத்தனை தகப்பனார் என்று கேட்கலாமா? (கைதட்டல்). அப்படிக் கேட்பவன் அறிவுடையவன் ஆவானா?

முதல் படம் இவன் தகப்பனார் வாலிபனாக இருந்தபோது எடுத்த படம். அடுத்த படம், இவனுடைய தாயை, தகப்பனார் கல்யாணம் செய்து கொண்ட போது எடுத்த படம்.

அடுத்தது, இவன் குழந்தையாகப் பிறந்த போது எடுத்த படம்.

அடுத்து இவனை மண அறையில் மனைவியோடு தகப்பனார் ஆசீர்வாதம் செய்கிற படம்.

அடுத்தது இவன் பெற்ற குழந்தையைத் தகப்பனார் கொஞ்சுகிற படம். ஒரே தகப்பனார் பல காலத்தில் பல உருவில் இருக்கிறார்.

அதே போல் பரம்பொருள் ஒரே பிரம்மம், உல்கத்திலே துஷ்ட நிக்ரக பரிபாலனம் செய்ய பல ரூபத்தோடு பல காட்சிகளை எடுக்கிறார். இதை ஞாபகார்த்தம் செய்ய வேண்டுமென்பதற்காக, அந்தத்தத் திருக்கோலங்களாக – உருவங்களாக வைத்திருக்கிறார்கள். அத்தனை தெய்வம் இருக்கிறது என்று சொல்லவில்லை. இதுதான் ரகசியம். இதைச் சாதாரண அறிவற்ற நிலையில் “இத்தனை தெய்வங்களா ?” என்று கேட்பது நாலாம்தரக் கேள்வி…”