“நான் இந்தியாவின் நான்கு திசைகளிலும் பயணம் செய்திருக்கிறேன். ஆனால், இந்நாட்டில் திருடன் என்று யாரையும் நான் கண்டதில்லை. அப்படியொரு செல்வச் செழிப்பை நான் இந்த நாட்டில் காண்கிறேன். இவர்கள் உயர்ந்த ஒழுக்கக் கோட்பாடுகளுடன் மனோவலிமை படைத்தவர்கள். இவர்களின் முதுகெலும்பாக இருக்கும் ஆன்மீக பாரம்பரிய கலாச்சாரத்தை உடைக்காமல் நம்மால் இந்த நாட்டை வெற்றிக்கொள்ள முடியாது என்று நான் நினைக்கிறேன்.
எனவே, எனது திட்டம் என்னவென்றால், அவர்களது தொன்மையான பாரம்பரிய கல்வி முறை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை ஒழித்து, அந்த இடத்திற்கு நமது ஆங்கிலக் கல்வியைக் கொண்டு செல்ல வேண்டும். அவர்களது தொன்மையான கலாச்சாரத்தைவிட ஆங்கிலக் கல்வியும் கலாச்சாரமும்தான் உயர்ந்தது என்று நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதன் மூலம் தாங்கள் பாரம்பரிய பண்பாட்டில் உயர்ந்தவர்கள் என்ற அவர்களது எண்ணத்தையும் சுயகெளரவத்தையும் இழக்கச் செய்து, ஆங்கிலம்தான் உயர்ந்தது, அதுதான் அவர்களுக்கு நல்லது என்ற நிலையை உருவாக்கினால்தான் நாம் நினைத்தபடி இந்நாட்டை உண்மையிலேயே நமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முடியும்”.
-ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் லார்ட் மெக்காலே என்ற இந்தியாவுக்கான ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. நாம் தற்பொழுது கற்றுவரும் கல்வி முறை இவர் ஆலோசனைப்படி அறிமுகப்படுத்தப்பட்டதுதான்.
உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்!
“இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றி யாரும் எது வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் வேலை செய்து கொண்டிருப்பவன் என்ற முறையில் அல்லது குறைந்தபட்சம் வேலை செய்ய முயல்பவன் என்ற வகையில் நான் சொல்ல விரும்புவது இதுதான். நீங்கள் ஆன்மீகத்தைக் கைக்கொள்ளும் வரை இந்தியாவிற்கு முன்னேற்றம் கிடைக்காது. அவசரப்படாதீர்கள்.மற்றவர்களைக் காப்பியடிக்காதீர்கள். நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பாடம் இது. காப்பியடிப்பது ஒரு போதும் நாகரீகம் ஆகாது. சிங்கத் தோல் போர்த்திக் கொண்டாலும் கழுதை எந்தக் காலத்தலும் சிங்கம் ஆக முடியாது. காப்பியடித்தல் என்ற கோழைத்தனமான இந்தப் போலித்தனம் ஒரு போதும் முன்னேற்றத்தைத் தராது. ஒருவன் தன்னையே வெறுக்கத் தொடங்கிவிட்டானானால் அவனுக்கு இறுதி மணி அடிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம். ஒருவன் தன் முன்னோர்களைக் குறித்து வெட்கப்பட ஆரம்பித்துவிட்டானானால் அவனுக்கு முடிவுக்காலம் வந்துவிட்டது.
இதோ நான் இருக்கிறேன். இந்து இனத்தின் மிகச் சாதாரணமானவன் நான். என்றாலும் என் இனத்தைப் பற்றியும் என் முன்னோர்களைப் பற்றியும் பெருமைப்படுகிறேன். என்னை ஓர் இந்து என்று அழைத்துக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். உங்கள் தகுதியில்லாத வேலைக்காரர்களுள் ஒருவன் என்பதில் பெருமைப்படுகிறேன். உங்கள் நாட்டினன் என்பதில் பெருமைப்படுகிறேன். நீங்கள் மகான்களின் வழி வந்தவர்கள். இந்த உலகம் இதுவரை கண்டவர்களுள் நீங்கள் மாபெரும் ரிஷிகளின் வழித்தோன்றல்கள். எனவே உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் முன்னோர்களைக் குறித்து அவமானப்படாதீர்கள். அதற்குப் பதிலாகப் பெருமைப்படுங்கள். ஒரு போதும் போலித்தனமாக நடிக்காதீர்கள். காப்பியடிக்காதீர்கள்”.
-சுவாமி விவேகானந்தர் |
| |
|
1 comment:
இந்த விஷயத்தை பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி திரு. ரவிச்சந்திரன் அவர்களே.
Regards,
Kaarthik Babu. AC.
Post a Comment