Thursday, February 18, 2010

[Quotes] - Selected Quotes from Mother Sarada Devi

சாடுகிறார் சாரதாதேவியார்
* மனிதப்பிறவி துன்பங்கள் நிறைந்ததுதான். இதற்காக எந்த துன்பத்தைக் கண்டும் பயப்பட வேண்டாம். துன்பத்தை தாங்கி, அதை சமாளிப்பவரே மனிதரில் சிறந்தவர் ஆவார். இறைவனின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தால், துன்பங்களை பொறுத்துக் கொள்ளும் பக்குவம் தாமாகவே வந்துவிடும்.

* பணத்தின் மீது ஈடுபாடு கொண்டால் மனம் அழுக்காகிவிடும். பணம், பொருள் இவற்றில் நம் மனத்தைச் செலுத்தத் தொடங்கினால், வேறு திசையில் செல்லத் தொடங்கி விடுவோம். பேராசைக்காரர்களே! போதும் என்ற மனநிறைவோடு வாழ்வதே உங்கள் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

* மனிதர்களிடம் அன்பு செலுத்தினால் அந்த அன்பினை அவர்கள் உதாசீனப்படுத்தலாம். ஆனால், ஆண்டவன் மீது அன்பு காட்டினால் அவன் நம் அன்பை முழுமையாக ஏற்றுக் கொள்வார். அதனால் எப்போதும் இன்பம் மட்டும் இருக்குமேயன்றி, துன்பம் இருக்காது.

* தண்ணீரின் இயல்பு கீழ்நோக்கிப் பாய்வது தான். ஆனாலும், தண்ணீர் மீது விழும் சூரியனின் கிரணங்கள், அத்தண்ணீரை வானத்திற்கு உயர்த்தி விடுகின்றன. இதைப்போலவே, தாழ்ந்த விஷயங்கள், போகப்பொருட்கள் இவற்றை நோக்கி மனிதன் கீழ்நோக்கிச் செல்கின்றான். ஆனால், இறைவனுடைய அருள் மனிதன் மீது விழும் போது,
அவன் உயர்ந்த நிலையை அடைகிறான்.

Taken From Dinamalar

1 comment:

Gravity said...

Nice to see the tamil post in our blog... It is having nice messages...

வழக்கம் போல இந்த பதிவும் அசத்தல்