Sunday, October 20, 2013

[Message] - சீடருக்கு அறிவுரை


குழப்பத்துடன் இருந்த சீடனின் நிலையை அறிந்த மகான் அச்சீடனை தண்ணீருக்குள் அழுத்தினார். அவனை உள்ளே திண்டாடவிட்டு கடைசியில் வெளியே எடுத்தார்.

''உள்ளே இருந்தபோது மண், பொன், பெண் இவைகளை நினைத்தாயா?'' என்று கேட்டார்.

''ஐயோ,நினைக்கவே இல்லை. மூச்சுக்கு வழி கிடைக்காதா என்றுதான் ஏங்கினேன், துடித்தேன்,'' என்றான்.

மண்ணும் பொன்னும் சிகிச்சைக்குப் பணம் கொடுக்குமே தவிர சிகிச்சை செய்யாது.

அந்தக் கடைசி நேரத்தில், நாம் உலகை விட்டுப் பிரியும் நேரத்தில் மண்,பொன் எல்லாமே நமக்கு அற்பமாகத் தோன்றப் போகிறது.
அந்த நினைப்பை சற்று முன் கூட்டியே கொண்டு வந்தால் என்ன?

நாம் அறிவாளியாகவும், முன் எச்சரிக்கைஉடையவராகவும் இருந்தால் அதைத்தான் செய்வோம்.

-அழகிக்கு ஆயிரம் நாமம் என்ற நூலில்.




Thanks to 
இந்து மத வரலாறு - Religious history of hinduism

No comments: